லாலு பிரசாத் யாதவிற்கு ஜாமீன் வழங்க யோசனை!

14 April 2020 அரசியல்
laluprasadyadav.jpg

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிறையில் உள்ள லாலு பிரசாத் யாதவினை விடுவிக்க, சட்ட உதவியினைக் கோரியுள்ளது அம்மாநில அரசு.

2017ம் ஆண்டு தீவன ஊழல் வழக்கில் கைதான லாலு பிரசாத் யாதவிற்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் தற்பொழுது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சிறைத் தண்டனையை அனுபவித்து வருகின்றார். இந்நிலையில், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

ஆனால், அங்கு தற்பொழுது 10க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இருப்பதால், அவரை ஜாமீனில் விடுவிக்க அம்மாநில அரசாங்கம் சட்ட உதவயினை நாடியுள்ளது. அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் இது குறித்துப் பேசுகையில், லாலுவின் உடல்நலம் மிகவும் முக்கியமானது. அவர் சிறைக் கைதியும் கூட. ஆதலால், அட்வகேட் ஜென்ரலிடம் உதவி கேட்டுள்ளோம் எனக் கூறியுள்ளார்.

தற்பொழுது நடைபெறுகின்ற ஹேமந்த் சோரனின் ஆட்சியானது, லாலுவின் கூட்டணியுடன் நடத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS