பழனி பஞ்சாமிர்தத்தை தொடர்ந்து, திண்டுக்கல் பூட்டு, சேலம் கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு!

29 August 2019 அரசியல்
dindugallockandsaree.jpg.jpg

ஒரு மாதத்திற்கு முன்னர், பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பலப் பொருட்கள் தமிழகம் சார்பில், புவிசார் குறியீட்டிற்கு பரிந்துரைக்கப்பட்டன.

அதில், தற்பொழுது திண்டுக்கல் பூட்டிற்கும், சேலத்தைச் சேர்ந்த கண்டாங்கி சேலைக்கும் கிடைத்துள்ளது. 2003ம் ஆண்டு இந்த புவிசார் குறியீடு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் மூலம், இதில் பதிவாகும் பொருட்களுக்கு உலகளவில் தனி மதிப்பு உண்டு. அவ்வாறு பதியப்பட்ட பின், அதனை மற்றவர்கள் பயன்படுத்த முடியாது.

இதற்கு முன்னர், ஆரணி பட்டு சேலை, காஞ்சிபுரம் பட்டு, பவானி ஜமுக்காளம், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, கோரா காட்டன் சேலை, தஞ்சாவூர் ஓவியம், தோடா பூ வேலைப்பாடு, பழனி பஞ்சாமிர்தம், சின்னாளபட்டி சுங்குடி சேலை மற்றும் பத்தமடை பாய் ஆகியவை தமிழகம் சார்பில் புவிசார் குறியீடுகளைப் பெற்றன. இந்நிலையில், சென்ற மாதம் பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தம் புவிசார் குறியீட்டினைப் பெற்று அசத்தியது. தற்பொழுது திண்டுக்கல் நகரத்துப் பூட்டும், சேலம் கண்டாங்கி சேலையும் புவிசார் குறியீட்டினைப் பெற்று அசத்தியுள்ளன. இதன் மூலம், இனி வேறு நகரைச் சேர்ந்தவர்கள் திண்டுக்கல் பூட்டினை உற்பத்தி செய்து ஏமாற்ற முடியாது.

HOT NEWS