உலகில் இதுவரை உருவாக்கப்பட்டுள்ள மிகப் பெரிய வாகனங்கள்

31 March 2019 தொழில்நுட்பம்

வாகனங்களை நாம் பொதுவாக, போக்குவரத்திற்காகவும், பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வே உருவாக்கினோம். ஆனால், இன்று இதன் நிலை முற்றிலும் வேறு. இதில் மிகவும அசாதாரணமான முறையில் உருவாக்கப்பட்டுள்ள, மிகப் பெரிய வாகனங்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.

தி கேட்டர்பில்லர் 797
lashanalynch.jpg

சுமார் 50 அடி நீளமும், 31 அடி அகலமும், 51 அடி உயரமும் உடைய இந்த வாகனம், சுரங்கங்களில் மண் மற்றும் நிலக்கரியை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த வாகனத்தால், சுமார் 400 டன் எடை வரைத் தாங்க முடியும். இதில் ஏறி அமர்ந்து ஓட்டுவதற்காகவேத் தனியாக டவர் அமைத்துள்ளனர்.

நாசா கிரௌலர்

இதனை செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக, உலகின் முன்னணி விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான "நாசா" உருவாக்கியுள்ளது. இது மணிக்கு வெறும் 2 மைல் வேகத்தில் மட்டுமே, செல்லக் கூடியது. இது விண்வெளிக்குச் செல்லும் விண்கலத்தை ஏவுவதற்கு எடுத்துச் செல்ல உதவுகிறது.

தி பிக் மஸ்க்கி

இதுவே, உலகின் மிகப் பெரிய குழி தோண்டும் இயந்திரம் ஆகும். இது அமெரிக்காவில் உள்ள ஓகியோ மாகணத்தில் செயல்பட்டு வரும் நிலக்கரி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இது சுமார் 13,000 டன் எடையுடன், பார்ப்பதற்கு இரும்பால் செய்யப்பட்ட சிறிய மலைப் போலக் காட்சியளிக்கிறது. இது நம் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை விட, உயரமானது. ஆம், இதன் உயரம் சுமார் 222 அடி மற்றும் இதன் நீளம் 487அடி ஆகும். இது ஒரு முறைத் தோண்டி எடுக்கையில் சுமார் 295 டன் வரை, மண் அல்லது கரியை எடுக்கும் திறமை வாய்ந்தது.

அஹோய் மாட்டீஸ்

இது சுமார் 1300 அடி நீளத்துடன் 2015ல் ஐக்கிய அரபு கப்பல் கம்பெனியால் உருவாக்கப்பட்டது. இதனை கடலில் மிதக்கும் இல்லை, நகரும் "தீவு" எனக் கூறலாம். அந்த அளவிற்கு, மிகப் பிரம்மாண்டமாக கடலில் உலகை வலம் வருகிறது. மணிக்கு 26 மைல் வேகத்தில் செல்லத் தகுந்த இது சுமார் 1,00,000 கிலோவுக்கும் மேல், எடையை ஏற்றிச் செல்லும் அளவிற்கு சக்தி வாய்ந்தது.

HOT NEWS