அடுத்ததாக களமிறங்கும் லாசா வைரஸ்! இன்னும் எத்தனை வரப்போகுதோ?

16 March 2020 அரசியல்
lassavirus.jpg

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக, 6,500க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 117க்கும் அதிகமான நாடுகளில், இந்த கோவிட்-19 வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது.

இதனால், சர்வதேச வர்த்தகம், பொருளாதாரம் மட்டுமின்றி, இறைவழிபாடுகளும் குறைந்துள்ளன. இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும், தங்களுடைய எல்லைகளை மூடியுள்ளன. உலகமே, விரக்தியில் உள்ளது. இந்நிலையில், நைஜீரியா நாட்டில் சத்தமில்லாமல் மற்றொரு வைரஸ் உருவாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

லாசா வைரஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸானது, எலிகள் மூலமாகப் பரவுவது கண்டறியப்பட்டு உள்ளது. லாசா ஹெமோராஜிக் ஃபீவர்(எல்ஹெச்எப்) என அழைக்கப்படும் இந்தக் காய்ச்சலால், தற்பொழுது வரை நைஜீரியாவில் 144 பேர் மரணமடைந்து உள்ளனர். இந்த காய்ச்சலால், நைஜீரியாவின் 27 மாநிலங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக, அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நோயானது, எலிகள் மூலம் பரவினாலும், மனிதர்களின் சிறுநீர் மற்றும் உயிர் திரவங்களின் மூலமும் பரவும் தன்மையுடையதாகும். இந்த வைரஸால் ஏற்படும் பாதிப்பானது, ஏழு முதல் 21 நாட்களுக்குள் தெரிய ஆரம்பிக்கும் எனவும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

HOT NEWS