78,000 பேரை, வேலைக்கு எடுத்த ஐடி நிறுவனங்கள்!

18 May 2019 டெக்னாலஜி
recruitment.jpg

உலகளவில் பொருளாதார மந்த நிலை நீடிக்கும் நிலையில், இந்தியாவில் 78,000 பேரை வேலைக்கு எடுத்துள்ளன பல ஐடி நிறுவனங்கள்.

குறிப்பாக, டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் நிறுவனங்கள் இரண்டும் மட்டுமே 53,000 பேரை வேலைக்கு எடுத்துள்ளது. மீதமுள்ளவற்றை ஹெச்சிஎல், விப்ரோ போன்ற நிறுவனங்கள் எடுத்துள்ளன.

ஆசிய அளவில், கிடைக்கும் ப்ராஜெக்டுகளை எளிதாக, இந்தக் கம்பெனிகள் கைப்பற்றி விடுவதால், இவர்களுக்குப் பெரிய அளவில் இலாபம் உண்டாகிறது. மேலும், அந்த இலாபத்தை அடைவதற்கு, இத்தகையை அளவில் வேலையாட்கள் தேவைப்படுகின்றனர். எனவே, இவ்வாறு வேலைக்கு ஆட்களை எடுத்துக் குவித்துள்ளனர். மேலும், அனுபவம் வாய்ந்த வேலையாட்களையும், சத்தமில்லாமல் வேலையை விட்டு நீக்கியும் உள்ளனர். ஏனெனில், அனுபவஸ்தர்களுக்கு வழங்கும், சம்பளத்தை பத்து புதிய வேலையாட்களை வைத்துவிடலாம். மேலும், அனுபவஸ்தர்களைக் காட்டிலும், தற்பொழுது அதிக திறமையான ஆட்கள் கிடைப்பதால், அவர்கள் கேம்பஸ் இண்டர்வியூ மூலம், வேலைக்கு எடுத்துப் பயிற்சித் தந்து அவர்களையே வேலைக்கு வைப்பதில், அனைத்து முன்னணி நிறுவனமும் ஆர்வம் காட்டுகின்றனர்.

HOT NEWS