37 ஆண்டுகளுக்குப் பின் தமிழகம் வந்த நடராஜர்! ஆகம விதிப்படி பூஜைகள் செய்யப்பட்டன!

13 September 2019 அரசியல்
natarajar.jpg

37 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட நடராஜர் சிலை, மீண்டும் தமிழகத்திற்கு வந்தது. அதற்கு முறைப்படி, பூஜைகளும் செய்யப்பட்டன.

தமிழக காவல்துறை அதிகாரி பொன்மாணிக்கவேல் தலைமையில், காவல்துறையினர், சிலைத் திடுட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில், ஈடுபட்டு வருகின்றனர். கடத்தப்பட்ட சிலைகளை மீட்பது, அவைகளை உரிய இடத்தில் கொண்டு போய் சேர்ப்பது உள்ளிட்ட, பல வேலைகளை அவர்கள் வெற்றிகரமாக செய்து வருகின்றனர்.

ராஜராஜசோழன், உலகமா தேவி சிலை உட்பட பல சிலைகளை உலகின் பலப் பகுதிகளில் இருந்து, பொன் மாணிக்கவேல் வெற்றிகரமாக மீட்டு வந்தார். இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக் குறிச்சியில் உள்ள புகழ்பெற்ற குலசேகரமுடையார் திருக்கோவிலில் இருந்து, 37 ஆண்டுகளுக்கு முன்னர், ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலை காணாமல் போனது. இதனைத் தேடும் பணி அன்று தொடங்கியது.

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி. திரு.பொன்மாணிக்கவேல், தலைமையில், மத்திய அரசின் உதவியுடன், இந்த நடராஜர் சிலை, ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு சென்ற அதிகாரிகள், அங்குள்ள அருங்காட்சியகத்தில் இருந்து, 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த நடராஜர் சிலையை மீட்டனர்.

விமானம் மூலம், இந்தியா வந்த நடராஜர் மீண்டும், ரயில் மூலம் சென்னைக் கொண்டு வரப்பட்டார். அவருக்கு இசை வாத்தியங்கள் முழங்க, பூஜைகள் செய்யப்பட்டு அழைப்பு நடந்தது. விரைவில், அந்த நடராஜர் சிலை, அந்தக் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

HOT NEWS