வானிலை அறிக்கையை படியுங்கள்! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளன!

25 September 2019 அரசியல்
rain.jpg

அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலைக் காரணமாக, தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிலும், சென்னை, காஞ்சிபும், வேலூர் ஆகியவைகளில் நல்ல மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன. தென் தமிழகத்தில் வரும் 30ம் தேதி முதல் அக்டோபர் ஒன்றாம் தேதி வரை, கன மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகின்றது.

காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கோவை போன்ற மாவட்டங்களில், மிதமான மழைக்கான சூழல்கள் நிலவுகின்றன.

அதே போல், மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர், நாகர்கோவில், கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில், மாலை நேரத்தில் மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன.

இது குறித்துப் பேட்டியளித்த அமைச்சர் ஆர்பி உதயகுமார், மக்கள் வானிலை அறிக்கையை முழுமையாகப் படிப்பதில்லை எனவும், மீட்புக் குழுவினர் உட்பட, தமிழக அரசாங்கமும், பாதுகாப்பு முகாம்களும் தயாராக உள்ளன என தெரிவித்தார்.

HOT NEWS