இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளினை முன்னிட்டு, தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுக்க உள்ள அவருடைய ரசிகர்கள், அவருடையப் பிறந்த நாளுக்கு தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
எப்பொழுதும், தன்னுடையப் பிறந்தநாளினை மிக எளிமையாகக் கொண்டாடுங்கள் எனக் கூறி வரும் ரஜினிகாந்த், இந்த முறை அப்படி எந்த ஒரு அறிவிப்பினையும் கூறவில்லை. அவரும், தன்னுடையப் பிறந்தநாளினைக் கொண்டாடவில்லை. அவர் தலைவர்168 படத்தின் முக்கியப் பணிகளில் உள்ளார்.
இந்நிலையில், ரஜினியின் வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள், அவரைக் காண வேண்டும் என ஆரவாரம் செய்தனர். இதனையடுத்து, திருமதி. லதா ரஜினிகாந்த், கையில் தட்டுடன் வெளியில் வந்ததைக் கண்டு விசிலடித்துக் கொண்டாட ஆரம்பித்ததனர். அங்கு திரண்டிருந்த ரசிகர்களுக்கு, இனிப்புகளை வழங்கி அவர்களுடைய அன்பினை ஏற்றுக் கொண்டார் லதா.