லெபானனில் சக்தி வாய்ந்த வெடிவிபத்து! 70க்கும் மேற்பட்டோர் பலி!

05 August 2020 அரசியல்
lebanonblast.jpg

லெபானனில் நேற்று நடைபெற்ற சக்தி வாய்ந்த வெடி விபத்தால், 70க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 1000க்கும் அதிகமானோர் காயமடைந்து உள்ளனர்.

லெபானின் தலைநகரான பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில், 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் எனும் வேதிப் பொருள் வைக்கப்பட்டு இருந்தது. அங்கு திடீரென்று பயங்கர தீயானது பிடித்தது. இதனை அணைக்கும் முயற்சியில், தீயணைப்பு வீரர்கள் துரிதமாக அழைக்கப்பட்டு வேகமாகச் செயல்பட்டனர். அந்தத் தீயானது, வேதிப் பொருள் சேமித்து வைக்கப்பட்டு இருந்த இடத்தின் மீது பரவியது. அதனை அணைப்பதற்குள், கண் இமைக்கும் நேரத்தில் அந்த ரசாயனக் கொள்கலன் வெடித்துச் சிதறியது.

இந்த வெடி விபத்தால், பெய்ரூட் நகருக்கு அருகில் உள்ள சைப்ரஸ் நகரில் அதிர்வுகள் ஏற்பட்டன. சுமார், 3.5 என நிலநடுக்கத்தினை அப்பகுதி மக்கள் உணர்ந்துள்ளனர். அந்த வெடி விபத்தால் அருகில் இருந்தப் பெரியக் கட்டிடங்கள் தரைமட்டமாகின. இந்த சம்பவத்தால், பலரைக் காணவில்லை. 4,000க்கும் அதிகமானோர் கடுமையாகக் காயமடைந்து உள்ளனர். 70 முதல் 80 பேர் வரை மரணமடைந்து இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வெடி விபத்துக் குறித்துத் தன்னுடையக் கண்டனத்தினை அந்நாட்டு அதிபர் மைக்கேல் ஆன், தற்பொழுது நடைபெற்றுள்ள வெடி விபத்தால், துறைமுகத்தினைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் அளவிற்குள் இருந்துள்ள கட்டிடங்கள் பல தரைமட்டமாகி உள்ளன. இத்தனை ஆண்டுகளாக, பாதுகாப்பற்ற முறையில் இவ்வளவு வேதிப் பொருட்களை அங்கு சேமித்து வைத்திருந்தவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஈவு இரக்கம் காட்டப்படாது எனவும் கூறியுள்ளார்.

HOT NEWS