கொரோனா வைரஸ் அறிகுறியினை முதன் முதலில் கண்டுபிடித்தவர் மருத்துவர் மரணம்!

08 February 2020 அரசியல்
liwenliang.jpg

சீனாவில் தற்பொழுது, கொரோனா வைரஸானது கோரத் தாண்டவம் ஆடி வருகின்றது. தற்பொழுது வரை, 750 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்த வைரஸ் உருவாகியிருப்பதைக் கண்டுபிடித்து, உலகிற்கு முதன் முதலாக கூறிய சீன மருத்துவர், லீவென்லியாங் தற்பொழுது அகால மரணமடைந்துள்ளார்.

லீ வென்லியாங் கடந்த டிசம்பர் மாதம், ஊஹான் நகரில், சார்ஸ் போன்ற ஒரு வைரஸ் உருவாகி இருப்பதாகவும், இந்த வைரஸால், முதலில் காய்ச்சலும், பின்னர் வரட்டு இருமலும் வருகின்றது எனவும் கூறியிருக்கின்றார். இதனால், அவரைப் போலீசார் கைது செய்து எச்சரித்துள்ளனர். இதனையடுத்து, அவர் கூறியது போல், இந்த வைரஸானது, தற்பொழுது தீவிரமாக பரவி வருகின்றது.

இதனால், அவருடைய நண்பர்களும் மற்ற சக மருதுவர்களும், அவருக்கு ஆதரவு அளித்தனர். அவர், தன்னுடைய நகரில், கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, சிகிச்சை அளித்து வந்தார். இந்நிலையில், இந்த வைரஸ் தொற்று, இவருக்கு ஏற்பட்டதால், தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். ஆனாலும், சிகிச்சைப் பலனின்றி, அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தால், சீன மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தங்களுக்காக, உழைத்த அந்த மருத்துவருக்காக சீனாவின் பலப் பகுதிகளில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது. அதே போல், அவரை போலீசார் எச்சரித்ததற்கு கடும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

HOT NEWS