ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! மத்திய அரசு அறிவிப்பு!

03 November 2019 அரசியல்
rajinikanthspeech1.jpg

ரஜினிகாந்தின் சேவையைப் பாராட்டி, அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை அறிவித்துள்ளது மத்திய அரசு.

கோவாவில் நடைபெறும் 50வது சர்வதேச பட விழாவானது, வரும் 20ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை சுமார், 9 நாட்கள் நடைபெற உள்ளன. இந்த விழாவினை, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளும் கூட்டாக நடத்துகின்றன.

இதில் அமிதாப் பச்சன் உட்பட, உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைசிறந்த கலைஞர்களின் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்த விழாவில், ரஜினிகாந்தினை கௌரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விழாவில், ரஜினிகாந்தினை கௌரவப்படுத்தும் விதத்தில், அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

இதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நன்றி தெரிவித்து டிவீட் செய்துள்ளார்.

HOT NEWS