கொரோனா வைரஸின் ஆயுள் எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சி ரிப்போர்ட்!

19 March 2020 அரசியல்
coronalife.jpg

கொரோனா வைரஸின் ஆயுள் குறித்து, பரபரப்பு ஆய்வு முடிவு ஒன்று வெளியாகி உள்ளது.

ஒவ்வொரு வைரஸிற்கும் ஆயுள் காலம் என்பது உண்டு. உயிரில்லாத நிலையில், இந்த வைரஸ்களால் பரவ இயலாது. மேலும், பெரிய தாக்கத்தினையும் ஏற்படுத்த இயலாது. இதனால், இந்த கொரோனா வைரஸானது, எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கும் என, ஆய்வின் முடிவானது தற்பொழுது வெளியாகி உள்ளது.

நியூ இங்கிலாந்து ஜோர்னல் ஆஃப் மெடிசன் என்றப் பத்திரிக்கையில், இது குறித்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது. அதில் அதிர்ச்சிகரமான மற்றும் வியக்க வைக்கும் தகவல்கள் பகிரப்பட்டு உள்ளன. ஒருவரிடம் இருந்து மற்றவரிடம் எளிதாகப் பரவும் இந்த வைரஸானது, காற்றில் உள்ள நீர்த்திவலைகளில், சுமார் 3 மணி நேரம் உயிர் வாழும் திறன் படைத்தது.

அதே போல், தாமிரம் மற்றும் அதனால் ஆனப் பொருட்களில் நான்கு மணி நேரமே உயிர்வாழும் திறனைப் பெற்றுள்ளது. அட்டைப்பெட்டிகளில் 24 மணி நேரமும், பிளாஸ்டிக் மற்றும் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் பொருட்களில் இரண்டு முதல் மூன்று நாட்கள் உயிர் வாழும் திறனைப் பெற்றுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதனால், ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்கள் கைக்கு வரும் பொழுது, அதில் கொரோனா வைரஸ் இருகாது என உறுதியாகி உள்ளது. இதனால், ஆன்லைன் வர்த்தகம் தற்பொழுது தப்பியுள்ளது.

HOT NEWS