உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்! பொதுமக்கள் ஆர்வம்!

27 December 2019 அரசியல்
localbodyelection.jpg

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தலானது இன்று தொடங்கியது.

கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக, உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தது. இதனால், பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர ஆள் இல்லாததால் அரசாங்க இயந்திரம் முடங்கியது.

உச்சநீதிமன்றத்தின் கண்டனத்தின் காரணமாக, தேர்தல் ஆணையம் தற்பொழுது இந்தத் தேர்தலை நடத்தி வருகின்றது. தமிழகத்தில் 156 ஊராட்சி அமைப்புகளுக்கு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி, இந்தத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்தத் தேர்தலில், மொத்தம் நானகு வண்ணச் சீட்டுக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க வெள்ளை நிற வாக்குச்சீட்டுக்களைப் பயன்படுத்த வேண்டும். கிராம ஊராட்சி தலைவரை தேர்வு செய்ய இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினரை தேர்வு செய்ய மஞ்சள் நிற வாக்குச்சீட்டும், ஒன்றியக் கவுன்சிலரைத் தேர்வு செய்ய பச்சை நிற வாக்குச் சீட்டையும் பயன்படுத்த வேண்டும்.

மேலும், வாக்குச் சீட்டில், சின்னத்தின் மீது தான், முத்திரை வைக்க வேண்டும். வெற்றிடத்தில் வைக்கக் கூடாது. இரண்டு சின்னங்களில் முத்திரை வைக்கக் கூடாது. வாக்குச்சீட்டினை கசக்கக் கூடாது. எவ்விதக் குறியீடும் இடக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் வாக்காளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன.

HOT NEWS