வருகின்ற டிசம்பர் 1ம் தேதி வரை, ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாகவும், பிரான்சில் 2வது கொரோனா வைரஸ் அலை பரவ ஆரம்பித்து உள்ளது எனவும் அந்நாட்டு அதிபர் மேக்ரோன் தெரிவித்து உள்ளார்.
பிரான்சில் கொரோனா தொற்று தாக்கம் குறைந்திருந்த நிலையில், தற்பொழுது மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்றது குறிப்பாக, அந்நாட்டின் தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட பலப் பகுதிகளில் மீண்டும் கொரோனா வைரஸானது வேகமாகப் பரவ ஆரம்பித்து உள்ளது. இதனால், அந்த நாட்டில், கொரோனாவ வைரஸின் 2வது அலைப் பரவி இருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அதிபர் மேக்ரோன், தற்பொழுது பிரான்சில் 2வது கட்ட ஊரடங்கினை அமல்படுத்தி உள்ளார். மேலும், பாரிஸ் உள்ளிட்ட 9 நகரங்களுக்கு இரவு நேர முழு ஊரடங்கினை கடுமையாக அமல்படுத்தி உள்ளார். அதனுடன் பல்வேறுக் கட்டுப்பாடுகளையும் விதித்து உள்ளார். இதன் காரணமாக, பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் வரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் பேசுகையில், இந்த ஊரடங்கானது வருகின்ற டிசமர் 1ம் தேதி வரைக் கூட நீட்டிக்கப்படலாம். எனவே, பொதுமக்கள் தயைகூர்ந்து, இந்த ஊரடங்குக் காலத்தில் சமூக இடைவெளியினையும், பாதுகாப்பு அம்சங்களையும் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார்.