நாடு முழுவதும் மே-3 வரை ஊரடங்கு! மோடி அறிவிப்பு!

14 April 2020 அரசியல்
modimay3.jpg

இன்று காலை பத்து மணியளவில், வீடியோ மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றிய மோடி வருகின்ற மே-3 வரை ஊரடங்கினை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று காலை பத்து மணியளவில் வீடியோ மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார் பிரதமர் மோடி. சுமார், 25 நிமிடங்களுக்கு அவர் உரையாற்றினார். அப்பொழுது அவர் அம்பேத்கர் பற்றிப் புகழ்ந்து பேசினார்.

அவர் பேசுகையில், பலத் தடைகளைக் கடந்து தான், அம்பேத்கர் வந்தார் என்றார். பலரும் தங்களுடையப் பண்டிகைகளை கொண்டாட முடியாமல் இருப்பது புரிகின்றது. இருப்பினும், பொதுமக்களின் பாதுகாப்பே முக்கியம். நம்மை விட, ப நாடுகள் இந்த கொரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.

ஊரடங்கு உத்தரவினை மக்கள் கடுமையாகப் பின்பற்றியதன் காரணமாக, இந்த கொரோனா வைரஸானது கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இந்த ஊரடங்கால் பொதுமக்கள் வேதனைப்படுகின்றனர். அதனை என்னால் புரிந்து கொள்ள இயல்கின்றது. இருப்பினும், பூரணமாக குணமாவதற்காக வருகின்ற மே-3ம் தேதி வரை, இந்த ஊரடங்கினை நீட்டிக்க வேண்டு உள்ளது.

நம் நாட்டு மக்கள், இராணுவ வீரர்களைப் போல செயல்பட்டு கொண்டு இருக்கின்றீர்கள். அரசியல் சட்டத்தினை மதிப்பதும், அதன் வலிமையை நிலை நாட்டுவதும் நாம் அம்பேத்கருக்குச் செய்யும் நன்றி ஆகும் எனவும் தெரிவித்தார்.

HOT NEWS