மே-3 பிறகு நீட்டிக்கப்படுமா ஊரடங்கு? ஐந்து மாநிலங்கள் ஆதரவு!

27 April 2020 அரசியல்
coronaquarantine1.jpg

தற்பொழுது மே-3 வரை ஊடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த ஊரடங்கானது மேலும் நீட்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

ஒரே நாளில் 1396 பேருக்கு இந்த வைரஸானது பரவி உள்ளது. மொத்தமாக இந்திய அளவில், சுமார் 27,892 பேருக்கு இந்த வைரஸானது பரவி உள்ளது. இந்த வைரஸால், மஹாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, உத்திரப்பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.

இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவின் பல மாவட்டங்களில், முழு ஊரடங்கு உத்தரவானது கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அத்துமீறி நடமாடுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

தொடர்ந்து இந்த வைரஸானது பரவிக் கொண்டே இருப்பதால், இதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. எனவே, மேலும் ஊரடங்கினை நீட்டிக்குமாறு பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. தெலுங்கானா மாநிலம் ஊரடங்கினை ஏற்கனவே, நீட்டித்து உத்தரவிட்டுவிட்டது.

இதனைத் தொடர்ந்து, இன்று (27-04-2020) இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்களுடனும், பிரதமர் மோடி வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் பேசி வருகின்றார். இந்தக் கூட்டத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்மதா பேனர்ஜி கலந்து கொள்ளவில்லை. இந்தக் கூட்டத்தினைத் தொடர்ந்து, விரைவில் அடுத்த அறிவிப்பினை மோடி அறிவிப்பார் என்றுக் கூறப்படுகின்றது.

HOT NEWS