ஒரே நாளில் 2200 பேர் அமெரிக்காவில் மரணமடைந்து உள்ளனர். இதனால், அமெரிக்க அரசாங்கம் மட்டுமின்றி, அமெரிக்கர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், 2022ம் ஆண்டு வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் என, அந்நாட்டு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 15ம் தேதி நிலவரப்படி, 6,14,180 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதில், 49,857 பேர் இந்த நோய் தொற்று முழுவதுமாகக் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 26,061 பேர் இந்த வைரஸால் மரணமடைந்து உள்ளனர். அங்கு மேலும், இந்த வைரஸானது வேகமாகப் பரவலாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அங்கு எவ்வாறு ஊரடங்கு உத்தரவினை நீக்குவது என, அதிபர் ட்ரம்ப் யோசித்துக் கொண்டு இருக்கின்றார்.
இந்நிலையில், அந்நாட்டினைச் சேர்ந்த ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ரிசர்ஜ் ஆய்வு கட்டுரை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்பொழுது உள்ள சூழலின்படி, வருகின்ற 2022ம் ஆண்டு வரை ஊரடங்கினை அமல்படுத்த வேண்டும் என, கூறியுள்ளது.
இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை, இந்த வைரஸிலிருந்து மக்களைப் பாதுகாக்க ஊரடங்கு ஒன்றே வழி என, அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
Source:www.livemint.com/news/world/us-may-need-to-extend-social-distancing-for-virus-until-2022-report-says-11586930807326.html