சரியான நடவடிக்கையால் பாதிப்பு குறைவு! மத்திய அரசு அறிவிப்பு!

12 April 2020 அரசியல்
loveagarwal.jpg

சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, பல லட்சம் பேருக்கு பரவாமல் தடுக்கப்பட்டு உள்ளது என, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

அவர் வீடியோ காண்ப்ரன்ஸ் மூலம் பேசுகையில், மத்திய அரசின் சரியான நடவடிக்கைகளின் காரணமாகவே, தற்பொழுது பல லட்சம் பேருக்குப் பரவ வேண்டிய இந்த வைரஸானது தடுக்கப்பட்டு உள்ளது. தற்பொழுது வரை, தீவிரமான நடவடிக்கைகளையே மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்திற்குள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட, இரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதுபோன்ற கடுமையான ஊரடங்கினை கடைபிடிக்காவிட்டால், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது, எப்படியும் எட்டு லட்சமாக இருந்திருக்கும். தற்பொழுது ஒரே நாளில், 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த வைரஸால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது, 240 ஆக உயர்ந்துள்ளது. இந்திய அளவில், சுமார் ஒரு லட்சம் படுக்கை வசதிகள் தயாராக இருக்கின்றன எனவும், ரயில்கள் பெட்டிகளும், தனிமைப்படுத்தப்படும் அறைகளாக மாற்றப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

HOT NEWS