ஏப்ரல் 14க்குப் பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படாது! அமைச்சரவை அறிவிப்பு!

31 March 2020 அரசியல்
coronaquarantine1.jpg

ஏப்ரல் 14க்குப் பிறகு, இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கானது நீட்டிக்கப்பட மாட்டாது என, மத்திய அமைச்சர் அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும், தற்பொழுது ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு தவிர, வேறு எதற்காகவும் வெளியில் வரக் கூடாது என, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. வெளியில் நடமாட தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் தற்பொழுது வரை, 1251 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 32 பேர் இந்தியாவில் இறந்துள்ளனர்.

இந்நிலையில், பொதுமக்கள் இந்த ஊரடங்கு உத்தரவால், கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். தினக்கூலி ஊழியர்களின் நிலையானது, கேள்விக்குறியாகி உள்ளது. அவர்களுடைய அன்றாட உணவுக்குக் கூட, வழியில்லாத சூழ்நிலை நிலவி வருகின்றது. இதற்கிடையே, ஏப்ரல் 14ம் தேதிக்குப் பின்னும், ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக மக்கள் மத்தியில், புரளி பரவ ஆரம்பித்தது.

இது குறித்து தகவல் அளித்துள்ள பிரசாத் பாரதி நிறுவனம், நாங்கள் மத்திய அமைச்சரவையுடன் தொடர்பில் இருப்பதாகவும், சமூக வலைதளங்களில் பரவி வருகின்ற புரளிகளை மக்கள் நம்ப வேண்டாம் எனவும், ஏப்ரல் 14க்குப் பிறகு, ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளது.

HOT NEWS