ஜெய்பூரில் நுழைந்த வெட்டுக்கிளிகள் படை! என்ன ஆகும் விவசாயம்?

26 May 2020 அரசியல்
locustjaipur.jpg

இந்தியாவிற்குள் ஆப்பிரிக்காவின் பாலைவன வெட்டுக்கிளிகள் படை நுழையும் அபாயம் உள்ளதாக, ஏற்கனவே உலக உணவு பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்த சூழலில், தற்பொழுது அந்த எச்சரிக்கையை உண்மையாக்கும் விதத்தில் வெட்டுக்கிளி படை ஒன்று, ஜெய்பூர் நகரில் நுழைந்துள்ளது. கிட்டத்தட்ட 50,000 ஏக்கர் விவசாயம் நிலமானது, இந்த வெட்டுக்கிளியால் படையால், கவலைக்குரிய நிலையில் உள்ளது. பார்க்கின்ற எவ்வித இயற்கை பொருட்களையும் விட்டு வைக்காமல், அனைத்தும் உண்டு வருகின்றது.

ஜெய்பூர் நகரில் வசிப்பவர்கள், இந்த வெட்டுக்கிளிகளைத் துரத்துவதற்காக கைகளில், தட்டுக்கள், ஒலி எழுப்பும் பொருட்களை வைத்து, ஒலி எழுப்பி வருகின்றன. மேலும், விவசாயத்துறை அதிகாரி டாக்டார் ஓம் பிரகாஷ் பேசுகையில், தற்பொழுது விவசாயத்திற்கான காலக் கட்டம் இல்லை. இதனால், இந்த வெட்டுக்கிளிகள் ஒரே இடத்தில் இருக்காது.

விவசாய நிலம் நோக்கி, பயணம் செய்ய ஆரம்பிக்கும். தொடர்ந்து, எங்கு அதற்கு உணவு கிடைக்குமோ அங்கு நோக்கிப் பயணிக்கும். 1986ம் ஆண்டு இது போன்ற படையினை, ஜெய்பூர் நகரம் சந்தித்தது. கிட்டத்தட்ட 26 ஆண்டுகள் கழித்து, மீண்டும் இந்தப் படையானது அந்நகருக்குள் நுழைந்துள்ளது.

உலகளவில் மொத்தம் 30 நாடுகள், இந்த வெட்டுக்கிளிப் படையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவின் அண்டை நாடான, பாகிஸ்தானில் இந்த வெட்டுக்கிளிப் படையானது ருத்தர தாண்டவம் ஆடி வருகின்றது. இந்த வெட்டுக்கிளிகள் மீது, இந்தியர்கள் இரவு நேரத்தில், தீ வைத்தல், மருந்து தெளித்தல் போன்றவைகளைச் செய்து வந்தாலும், பெரிய அளவில் கட்டுப்படுத்த இயலவில்லை. மாறாக, இந்த வெட்டுக்கிளிகள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்று விடுகின்றன.

இந்த நிலைத் தொடர்ந்து நீடித்தால், கண்டிப்பாக இந்தியாவில் மற்றொரு பிரச்சனை பூதாகரமாக வெடிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், தற்பொழுது கொரோனா வைரஸ் பிரச்சனையானது நாளுக்கு நாள் பூதாகரமாக பரவி வருகின்றது. இந்நிலையில், இந்த வெட்டுக்கிளிப் பிரச்சனையும் பெரிய அளவில் உருவானால், கண்டிப்பாக அது இந்தியாவிற்கு மிகப் பெரியத் தலைவலியாக அமையும்.

HOT NEWS