ராஜஸ்தானில் வெட்டுக்கிளிப் படை! ஏற்கனவே அறிவித்தது போல் தாக்குதல்!

15 May 2020 அரசியல்
locustattack11.jpg

ராஜஸ்தானில் உள்ள விளைநிலங்களை, மே 11ம் தேதி முதல் வெட்டுக்கிளிகள் படையானது நாசம் செய்து வருகின்றது.

ஏற்கனவே உலக உணவு மற்றும் விவசாயப் பாதுகாப்பு அமைப்பானது, வெட்டுக்கிளிப் படையானது இந்தியா உட்படப் பல நாடுகளைத் தாக்கும் எனக் கூறியிருந்தது. அதன் எச்சரிக்கையை, இந்தியா உட்பட பல நாடுகள் மிகவும் கவனமாக ஏற்றுக் கொண்டன. இந்தியாவின் வெட்டுக்கிளி எச்சரிக்கை அமைப்பானது, தற்பொழுது அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மர் பகுதியில் கட்டுக்கடங்காத அளவில் வெட்டுக்கிளிகள் படையானது புகுந்துள்ளதாம், சுமார் 3,00,000 ஹெக்டேர் அளவுள்ள விவசாய நிலங்கள் உள்ள ராஜஸ்தானில் இந்த வெட்டுக்கிளிகள் புகுந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இது குறித்துப் பேசியுள்ள அதிகாரிகள், இந்த வெட்டுக் கிளிகள் மிகவும் சிறியவை. ஆதலால், இந்த வெட்டுக்கிளிகளின் பாதிப்பானது வருகின்ற ஜூன், ஜூலை மாதங்களில் தான் அதிகமாக இருக்கும் எனக் கூறப்பட்டு உள்ளது. எனவே, அவைகளை தடுக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வெட்டுக்கிளிகள் தற்பொழுது பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் புகுந்துள்ளன. விரைவில், இவைகளின் மற்றொரு பிரிவானது, வெறொரு வழியில் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

HOT NEWS