கொரோனாவைத் தொடர்ந்து வெட்டுக்கிளி படை அபாயம்! உணவுப் பஞ்சத்திற்கு அறிகுறி?

29 April 2020 அரசியல்
locustattack11.jpg

தற்பொழுது உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனிடையே அடுத்த ஒரு அச்சமும் உருவாகி உள்ளது.

இந்தியாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில், குஜராத் மாநிலத்தில், வெட்டுக்கிளி படையானது ஒரு மாவட்டத்திற்குள் புகுந்தது. ஒரு வாரத்திற்கும் மேலாக, அந்த மாவட்டத்தில் அந்த வெட்டுக்கிளிகள் படையானது, அட்டகாசம் செய்தது. ஆய்வாளர்கள், அதிகாரிகள் எனப் பலரும் அந்தப் பகுதியினை ஆய்வு செய்து பின்னர் சென்றுவிட்டனர்.

ஆனால், அந்த வெட்டுக்கிளிகளைத் தடுப்பது குறித்து எவ்வித ஆலோசனையும் செய்யவில்லை. இது குறித்து பேசுகையில், அந்த வெட்டுக்கிளிகள் எப்படியும் ஒரு வாரத்திற்குள் உணவில்லாமல் இறந்து விடும். எனவே, அதுபற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்றுக் கூறியிருந்தனர். இந்த வெட்டுக் கிளிகள் படையானது, பாகிஸ்தானில் புகுந்து அட்டகாசம் செய்தது. இதனால், பாகிஸ்தான் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, ஆப்பிரிக்க நாடுகளான சோமாலியா உள்ளிட்ட நாடுகளில், புகுந்து அந்த நாட்டின் விவசாய நிலங்களை நாசம் செய்தது. தற்பொழுது, அந்த வெட்டுக்கிளி கூட்டமானது, இந்தியப் பெருங்கடல் வழியாக, இந்தியா நோக்கி வந்து கொண்டு இருக்கின்றது. இதனை, வங்கதேச விவசாயத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் இது குறித்து, ஐக்கிய நாடுகள் சபையும் இந்தியாவினை எச்சரித்துள்ளது.

இந்த வெட்டுக்கிளிகள் ஆப்பிரிக்க வகையினைச் சார்ந்தவை. இந்த வெட்டுக்கிளிகள் கூட்டமாக வாழ்பவை. ஒரு மரத்தினை பிடித்தால், அதில், ஒரு இலையைக் கூட விட்டு வைக்காமல் மொத்தமாக உண்டுவிடும். அந்த அளவிற்கு பசியுள்ளவை. அப்படிப்பட்ட வெட்டுக்கிளிகள் இரண்டு படைகளாக, கிளம்பியுள்ளன. ஒரு படையானது, இந்தியப் பெருங்கடல் வழியாக இந்தியா, வங்கதேசத்தினை நோக்கி வந்து கொண்டு உள்ளன.

மற்றொரு படையானது, ஏமன், பஹ்ரைன், குவைத், கத்தார், ஈரான், சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்குள் நுழையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படையினைச் சேர்ந்த வெட்டுக் கிளிகள், பஞ்சாப், ஹரியானா, மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்டவைகளை தாக்கும் என்றுக் கூறப்படுகின்றது.

இது குறித்து, உலக உணவு மற்றும் விவசாய அமைப்பானது, ஆய்வறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 21ம் தேதி நிலவரப்படி, இந்த வெட்டுக்கிளிகள் ஆப்பிரிக்காவில் அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் ஆப்பிரிக்க விளைநிலங்களை நாசம் செய்து வருகின்றன. இவைகள், புகும் இடமானது, பாலைவனமாக மாறிவிடும் என்பதால், இதனை பாலைவன வெட்டுக்கிளிகள் என்று அழைக்கின்றனர்.

இந்த வெட்டுக்கிளிகளில் ஒரு பிரிவானது, தற்பொழுது சவுதி அரேபியா, ஈராக், ஓமன், ஐக்கிய அரபு நாடுகள், ஏமன், பென்னிசுலா, உள்ளிட்ட நாடுகளில் தற்பொழுது குஞ்சு பொறிக்கின்ற நிலையில் உள்ளன. விரைவில், அவை பறக்கும் நிலையை அடைந்து விடும். அவ்வாறு ஆன உடன், விரைவில் இவை பறக்க ஆரம்பித்துவிடும். பின்னர், உணவிற்காக விவசாய நிலங்களில் புகந்துவிடும் என எச்சரித்துள்ளது.

இந்த வெட்டுக்கிளிகள் ஒரு நாளைக்கு, 150 கிலோமீட்டர் தூரம் வரையிலும் பறக்கக் கூடியது. ஒரு சதுர கிலோமீட்டரில், 40 லட்சம் வெட்டுக்கிளிகள் இருக்கும். மொத்தம் பத்து கோடி வெட்டுக் கிளிகள் இந்த படைகளில் இருக்கலாம் எனக் கூறப்பட்டு உள்ளது. இவைகளின் எண்ணிக்கையானது, நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது. இந்த ஒரு சதுர கிலோமீட்டரில் உள்ள வெட்டுக்கிளிகளே, ஒரு நாளைக்கு 35,000 மக்கள் எவ்வளவு உணவு உண்பார்களோ அவ்வளவு உணவினை உண்டுவிடும்.

ஒரு வெட்டுக்கிளியானது, ஒரு நாளைக்கு 2.3 கிலோ உணவினை உண்ணும் அளவிற்கு இருக்கும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது. ஒரு வேளை, இதன் படையானது இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குள் புகுந்தால், உணவுப் பஞ்சம் உள்ளிட்டப் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. ஏற்கனவே உலக நாடுகள், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது இந்தப் பிரச்சனையும் தலைவலியாக மாறியுள்ளது.

HOT NEWS