ஆதித்யா டிவியின் அட டேய் நிகழ்ச்சியில் பிரசித்த நடிகரான லோகேஷ் பாப்பிற்கு, தலையில் அறுவை சிகிச்சை நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, நடிகர் லோகேஷ் பாபிற்கு சாலையில் விபத்து ஏற்பட்டது. இதனால், அவருடைய தலையில் பலத்த அடி விழுந்தது. மயங்கிய நிலையில் இருந்த அவர், அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து அறுவை சிகிச்சைக்குப் பணம் தேவைப்பட்டது.
அதற்காக, அவருடன் பணியாற்றிய சகக் கலைஞர்களான குட்டி கோபி உள்ளிட்ட பலப் பிரபலங்களும், உதவி கேட்டு வீடியோக்களை வெளியிட்டனர். இந்த சூழ்நிலையில், சன் நெர்வொர்க் தாமாக முன் வந்து, போலேகஷ் பாபின் அறுவை சிகிச்சை செலவினை ஏற்றுக் கொண்டது. இந்த சூழ்நிலையில், அவர் அறுவை சிகிச்சை முடிந்த அவர் தொடர்ந்து, மருத்துவ உதவியினைப் பெற்று வந்தார். இருப்பினும், தலையில் உள்ள எலும்பில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது.
அவரை நடிகர் விஜய் சேதுபதி, நேரில் சென்று சில மாதங்களுக்கு முன்பு பார்த்து விட்டு நலம் விசாரித்தார். இந்நிலையில், தற்பொழுது அவருக்கு இரண்டாவது அறுவை சிகிச்சையும் முடிந்துள்ளது. அதில், அவருக்கு தலையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் எனவும் கூறப்படுகின்றது. சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.