டெல்லியில் விவசாயிகள் செய்து வருகின்ற போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, லாரிகள் ஸ்டிரைக்கானது அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம், மூன்று புதிய விவசாய மசோதாக்களை அறிமுகம் செய்தது மத்திய அரசு. இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தினைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி நுழைவுவாயில்களில், லட்சக்கணக்கில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் பல விவசாயச் சங்கள் ஈடுபட்டு உள்ளன. அவைகளை அழைத்து மத்திய விவசாயத்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தியப் போதிலும், எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்த சூழலில் டெல்லியில் நடைபெற்றுவருகின்ற விவசாயிகள் போராட்டத்திற்கு பலரும் தங்களுடைய ஆதரவினைத் தெரிவித்து வருகின்றனர். இதற்கு தற்பொழுது அகில இந்திய மோட்டார் காங்கிரஸூம் தன்னுடைய ஆதரவினைத் தெரிவித்து உள்ளது.
இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, வருகின்ற டிசம்பர் 8ம் தேதி முதல் காலவரையறையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. இதனால், இந்தப் போராட்டத்தினைக் கட்டுப்படுத்துவதுக் குறித்து, அமித்ஷா தலைமையில் அமைச்சர்கள் கூட்டமானது நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.