தமிழில் மாயா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஆரி. தற்பொழுது அவர், எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துக்குவான் என்றப் படத்தில் நடித்து வருகின்றார். பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மூலம், தமிழில் பிரபலமடைந்தவர் லாஸ்லியா.
இவரும், ஆரியும் இணைந்து நடிக்கும் படத்தின் பூஜையானது, தற்பொழுது நடைபெற்று உள்ளது. இந்தப் படத்தினை சந்திரா மீடியா விஷன் தயாரிக்க உள்ளது.
இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர் மற்றும் நடிகையர் பற்றியத் தகவல்கள் வெளியாகவில்லை. விரைவில் இப்படத்தின் பெயர் மற்றும் மற்ற விவரங்கள் வெளியாகும் என வெளியிடப்பட்டுள்ளது. இதனை தற்பொழுது, லாஸ்லியாவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். லாஸ்லியாவிற்கு பட வாய்ப்பு கிடைச்சுருச்சு, கவினுக்கு எப்போ?