பாஸ்போர்ட்டில் தாமரை சின்னம்! இந்திய அரசு விளக்கம்!

13 December 2019 அரசியல்
indianpassport.jpg

இந்தியாவில் தற்பொழுது வழங்கப்பட்டு வரும் பாஸ்போர்ட்டுகளில், தாமரை சின்னம் பொறிக்கப்பட்டு உள்ளது. அது தற்பொழுது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் ஜீரோ ஹவர் நேரத்தில், காங்கிரஸ் கட்சியினைச் சேர்ந்த எம்கே ராகவன் இது குறித்து கேள்வி எழுப்பினார். அவர் பேசுகையில், கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் வழங்கப்பட்டு வரும் பாஸ்போர்ட்டுகளில், தாமரை சின்னம் பொறிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, மத்திய அரசு தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதற்கு விளக்கமளித்துப் பேசிய வெளியுறவுத் துறையைச் சேர்ந்த ரவீஷ் குமார், இந்த அடையாளம், நம் நாட்டினைச் சேர்ந்தது தான். தாமரை நம் நாட்டின் தேசிய மலர், இதனை போலி பாஸ்போர்ட்டுகளை கண்டுபிடிக்கவேப் பயன்படுத்துகின்றோம்.

இது மட்டுமல்ல, இந்தியாவின் பல்வேறு சின்னங்கள் இனி தயாராகும் பாஸ்போர்ட்டுகளில் பதிக்கப்படும். அதன் மூலம், போலி பாஸ்போர்ட்டுகளை எளிதாக அடையாளம் காண இயலும் எனக் கூறியுள்ளார். மேலும், இந்த சின்னங்கள் சுழற்சி முறையில் பயன்படுத்தப்படும் என்றும் கூறினார்.

HOT NEWS