சிம்பு சரியாக சூட்டிங் வருகின்றாரா? மாநாடு தயாரிப்பாளர் விளக்கம்!

07 March 2020 சினிமா
strmaanadu.jpg

சிம்பு தற்பொழுது மாநாடு படத்தில் நடித்து வருகின்றார். இதனை, சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகின்றார். இந்தப் படத்தினை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி வருகின்றார்.

இந்தப் படத்தின் சூட்டிங்கானது, தற்பொழுது விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கின்றது. இதனிடையே, நடிகர் சிம்பு படப்பிடிப்புத் தளத்திற்கு தாமதமாக வருவதாகவும், இரண்டு கேரவன்கள் கேட்பதாகவும், ஹைதராபாத்தில் நடைபெற உள்ள சூட்டிங்கிற்கு வரமாட்டேன் எனக் கூறியதாகவும் செய்திகள் வெளியாகின.

இது குறித்துப் படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மனம் திறந்துள்ளார். அவர் கூறுகையில், நாங்கள் வட்டிக்கு வாங்கித் தான் படம் எடுக்கின்றோம். இவ்வாறு, பொய்யான செய்திகள் பரவுவதால், பணம் கொடுத்தவர்கள் பதற்றம் அடைவர். இந்தப் படத்திற்கு, ஆரம்ப நாள் முதல் தற்பொழுது வரை, ஒரு நாள் விடாமல், சரியான நேரத்தில் நடிகர் சிம்பு வந்து கலந்து கொள்கின்றார். அவர் இரண்டு கேரவன்கள் கேட்கின்றார் என்பதெல்லாம் பொய். உண்மையைக் கூற வேண்டும் என்றால், அவர் கேரவனுக்குள் செல்வதே இல்லை.

காலையில் சூட்டிங் வரும் சிம்பு, குடையைப் பிடித்துக் கொண்டு, சூட்டிங் நடக்கும் இடத்திலேயே இருக்கின்றார். சூட்டிங் முடிந்த பின் தான், கேரவனுக்குள் செல்கின்றார். அடுத்தக் கட்டப்படப்பிடிப்பிற்காக, ஹைதராபாத்திற்கு செல்கின்றோம். அங்கு நடக்கும் சூட்டிங்கிற்கும், சிம்பு வருகின்றார். தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

HOT NEWS