மாநாடு படத்தின் அறிவிப்பு வெளியானது! படக் குழுவினர் பெயர்கள் அறிவிப்பு!

17 January 2020 சினிமா
maanadu.jpg

நீண்ட காலமாக, சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகிக் கொண்டே இருந்தது. இருப்பினும், சிம்பு சரியாக ஒத்துழைப்பு அளிக்காததால் படத்தில் இருந்து சிம்பு நீக்கப்படுவதாக, படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, சபரிமலைக்கு மாலையைப் போட்ட சிம்பு, மலைக்குச் சென்று வந்ததும் மாநாடு படத்தினை தொடங்கலாம் என தயாரிப்பாளருக்கு உத்திரவாதம் அளித்திருந்தார். இந்நிலையில், மாட்டுப் பொங்கல் திருநாளை முன்னிட்டு, படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படத்தில் உள்ள கலைஞர்கள் பற்றிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

மாநாடு திரைப்படத்தின் குழு விவரம்

இயக்குநர்-வெங்கட் பிரபு


இசையமைப்பாளர்-யுவன் சங்கர் ராஜா


ஒளிப்பதிவாளர்-ரிச்சர்ட் எம் நாதன்


படத்தொகுப்பாளர்- பிரவீன். கே.எல்


தயாரிப்பு வடிவமைப்பாளர்-ராஜீவன்


சண்டைப் பயிற்சி-ஸ்டன்ட் சில்வா


கலை இயக்குநர்-சேகர்


ஆடை வடிவமைப்பாளர்-வாசுகி பாஸ்கர்


டிசைனர்-டியூனி ஜான்


மக்கள் தொடர்பாளர்-ஜான்


நடிகர்கள்- சிம்பு, பாரதி ராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன்


இந்தப் படத்தில் முதன் முறையாக இஸ்லாமிய இளைஞராக, நடிகர் சிம்பு நடிக்க உள்ளார் என, இயக்குநர் வெங்கட் பிரபு வீடியோ பதிவின் மூலம் தெரிவித்து உள்ளார். அவருக்கான சரியானப் பெயரினை ரசிகர்களே தேர்ந்தெடுத்துத் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், படத்தில் நடிக்க உள்ள பிற நடிகர், நடிகைகளின் பெயர்கள் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

HOT NEWS