கடுமையாக உடற்பயிற்சி செய்யும் சிம்பு! வந்தா பிட்டா தான் வருவேன்!

20 January 2020 சினிமா
simbuworkout.jpg

மாநாடு படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், தற்பொழுது நடிகர் சிம்பு தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு உள்ளார்.

சபரிமலைக்கு மாலை அணிந்திருந்த சிம்பு, கோயிலுக்கு சென்று வந்த பின் புத்துணர்ச்சியுடன் காணப்படுகின்றார். அவர் தற்பொழுது, மாநாடு படத்தில் நடிப்பதற்கு ஆயத்தமாகி வருகின்றார். இந்நிலையில், அவர் உடல் அதிக எடைப் போட்டதால், உடலைக் குறைப்பதற்காகவும், வலிமையாக்குவதற்காகவும் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.

வீடு, ஜிம் என, மாறி மாறி ஆளே வேற லெவல் சிம்புவாக உழைத்து வருகின்றார். அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று, தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் சிம்பு, பலவித உடற்பயிற்சிக் கருவிகளைப் பயன்படுத்தி தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.

எப்படியோ, மீண்டு வந்த சிம்பு, மாநாடு படம் மூலம் மீண்டும் வந்தால், மகிழ்ச்சி தான்!

HOT NEWS