இந்தியாவில் தயாராகும் போர் விமானம்! அடுத்த ஆறு வருடத்தில் தயார்!

05 June 2020 அரசியல்
fighterjet.jpg

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டு பயன்படுத்துவதற்கான, போர் விமானம் உருவாக்குவதற்கு தற்பொழுது அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர் கப்பலில் தற்பொழுது தேஜஸ் என் ரக விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், கப்பலில் பயன்படுத்தும் விதத்திலும், இந்தியாவிலேயே விமானத்தினைத் தயாரிக்கும் திட்டம் தயாராகி உள்ளது. இதனை ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சியானது அனுமதி வழங்கி உள்ளது.

இந்த விமானமானது, சுமார் 7000 கோடி முதல் 8000 கோடியில் உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட உள்ளது. இந்த விமானமானது, தரையிறங்கும் பொழுது மணிக்கு 244 கிலோமீட்டர் வேகத்தில் இறங்கும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. இந்த விமானமானது, விரைவில் உருவாக்கப்பட உள்ளது. அடுத்த ஆறு ஆண்டுகளில் முதல் விமானம் உருவாக்கப்படும். இந்த விமானத்தின் தயாரிப்பு வெற்றிப் பெறும் பட்சத்தில், உள்நாட்டிலேயே பல விமானங்கள் உருவாக்கப்படும் என்றுக் கூறப்பட்டு உள்ளது.

HOT NEWS