உள்ளாடை அணியாத பிக்பாஸ் பெண் போட்டியாளர்! மதுமிதா அதிர்ச்சி தகவல்!

11 September 2019 சினிமா
madhumithainterview.jpg

நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார், பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர் மதுமிதா. தன்னுடைய கையை பிக்பாஸ் நிகழ்ச்சியில், காவிரி விவகாரத்திற்காக கையை அறுத்துக் கொண்ட நடிகை மதுமிதா மீது, போலீசில் பிக்பாஸ் நிகழ்ச்சி சார்பில், அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்நிலையில், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மீது புகார் கூறினார். இப்படி மாறி மாறி புகார் அளித்துக் கொண்டிருந்த நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்பொழுது பேசிய அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில், நான் வெளியேற்றப்பட்டேன். ஆனால், மற்ற போட்டியாளர்களும் நான் செய்த தவறுகளை செய்தனர். ஆனால், அவர்களை அந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் கண்டு கொள்ளவில்லை. நான் கையை அறுத்துக் கொண்ட பின், ரத்தம் அதிக அளவில் வெளியேற ஆரம்பித்தது. அப்பொழுது, அந்த எட்டு பேருமே, கண்டுகொள்ளவில்லை. ஆனால், அப்பொழுது, சேரன் மற்றும் கஸ்தூரி ஆகியோர் மட்டுமே எனக்காக வந்து, என்னை மனிதாபிமானத்தோடு ஆறுதல் கூறினர். அவர்களே என்னுடன் நின்றனர்.

கஸ்தூரி அக்கா எனக்காக, அவர்களிடம் மாட்டிக் கொண்டார் என்று தான் கூற வேண்டும். அங்கிருக்கும் ஒரு சிலர் தன்னை நல்லவர்களாக காட்டிக் கொள்கின்றனர். நான் வீட்டிற்கு வந்து பிக்பாஸ் பார்த்தப் பின் தான் தெரிகிறது, நான் ஒரு வில்லியைப் போலக் காட்டப்பட்டுள்ளேன் என்று.

போட்டி ஆரம்பித்து இரண்டு நாள் கழித்து, நானும் வனிதா அக்காவும் ஒரு விஷயத்தைப் பார்த்து அதிர்ந்தோம். அது, உள்ளே உள்ளப் போட்டியாளர் ஒருவர் உள்ளாடை எதுவும் அணியாமல், சகஜமாக நடமாடுகின்றார். அதனைப் பற்றி நானும், வனிதா அக்காவும் கவலைப்பட்டோம். லஸ்லியா செய்வது சரியா? என நீங்களேக் கூறுங்கள். போட்டி ஆரம்பித்து, இரண்டு மூன்று நாட்களில், காதல் என்கின்றார்கள், பின்னர் அது இன்னொருவரின் குழந்தை என்கின்றனர். என்ன செய்கின்றார்கள் என்றே, தெரியவில்லை.

மேலும், போட்டியினை தமிழகத்தில் உள்ள ஆண்களும் பார்க்கின்றனர் என்பதை மறந்து, இன்னும் அந்தப் போட்டியாளர் உள்ளாடை அணியாமலேயே விளையாடி வருகின்றார். உள்ளே அரசியல் பேசக் கூடாது என்கின்றார்கள். நான் அரசியல் பேசவில்லை. கமல்ஹாசன் மீது நாம் அனைவருமே, மரியாதையும் நம்பிக்கையும் வைத்துள்ளோம். அவரால், அனைத்தையும், அனைத்து நேரங்களிலும் கண்காணிக்க இயலாது. ஆனால், அவர் நினைத்தால், அவர் தன்னுடைய ஆட்களில் ஒருவரை, அந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் கட்டுப்பாட்டு அறையில் அமர வைத்து, கண்காணிக்க முடியும்.

உள்ளே இருப்பவர்களில், யார் ஜெயிக்க வேண்டும் என்று, மக்களுக்குத் தெரியும். நான் அதைக் கூற விரும்பவில்லை. ஒரு இண்டர்வியூ கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள் என விஜய் டிவியிடம் கேட்டேன். அவர்களிடம் இருந்து, ஒரு மெயில் வந்தது. பின்னர், ஒரு நாளில் இண்டர்வியூ வைத்துக் கொள்வோம் எனக் கூறினர். இவ்வாறு பேசும் பொழுது, அவர் சற்று உணர்ச்சிவசப்பட்டார்.

HOT NEWS