ஐநா நல்லெண்ணத் தூதராக சலூன் கடைக்காரரின் மகள் தேர்வு!

05 June 2020 அரசியல்
maduraisaloonmohan.jpg

கடந்த வாரம் மதுரையைச் சேர்ந்த சலூன் கடைக்காரரைப் பற்றி, பிரதமர் மோடி தன்னுடைய மான்கீ பாத் நிகழ்ச்சியில், புலகாங்கிதப்பட்டு பேசியிருந்தார்.

மதுரையைச் சேர்ந்த 47 வயதான மோகன் என்பவர், தன்னுடைய மகளுடைய படிப்பிற்காக 5 லட்ச ரூபாயினை சேர்த்து வைத்து இருக்கின்றார். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததால், தன்னுடைய மகளின் செலவிற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தினை எடுத்து, பலருக்கும் பலசரக்கு, மருந்துகள், உணவுப் பொருட்கள், அரிசி, காய்கறிகள், சமையல் எண்ணெய் உள்ளிட்டவைகளை வழங்கி வந்தார்.

இந்த விஷயம் பிரதமர் மோடிக்கு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தன்னுடைய மகளுடையப் படிப்பிற்காக வைத்திருந்த பணத்தினை, பொதுமக்களுக்காக வழங்கியதற்காக பாராட்டுக்களைத் தெரிவித்தார். மோகனின் மகள் நேத்ரா, தான் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்றுக் கூறியுள்ளார். அவர் தற்பொழுது ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றார்.

இந்நிலையில், இன்று காலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதில், இந்தியாவின் சார்பில் ஐநாவின் நல்லெண்ணத் தூதராக நேத்ரா தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் இந்தியாவின் சார்பில், ஐநாவில் நடைபெறும் கூட்டத்தில் பேச உள்ளார். மேலும், அவருக்கு ஊக்கத் தொகையாக சுமார் ஒரு லட்ச ரூபாயினை மத்திய அரசு அறிவித்துள்ளது.

HOT NEWS