குஜராத்தை குறி வைக்கும் மஹா புயல்! முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்!

06 November 2019 அரசியல்
mahacyclone.jpg

அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள மஹா புயலானது, தற்பொழுது குஜராத்தினை நோக்கி நகர்ந்துள்ளது. இதனால், அங்கு கடும் புயல் காற்றும், கன மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக, தேசிய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

குஜராத்தின் தியூ என்ற கடற்பகுதியில், கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது அந்தக் கடற்பகுதியில் இருந்து, சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதன் காரணமாக, சுமார், 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில், புயல் காற்று வீச வாய்ப்பிருப்பதாக கணித்துள்ளனர். இதனால், மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் புயலால், கன மழைப் பெய்வதற்கு அதிக வாய்ப்புள் இருப்பதாக கருதப்படுகின்றது. இதனையடுத்து, பிரதமர் மோடி இது குறித்து, உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து, நான்கு கப்பல்களில், நிவாரணப் பொருட்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. கடற்பகுதியானது தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றது.

மேலும், விமானப்படைக்குச் சொந்தமான, ஹெலிகாப்டர்களும் விமானங்களும் மீட்புப் பணிக்காக தயாராக இருக்க அறிவுறுப்பட்டுள்ளன. மேலும், தியூ பகுதியில் இந்த மஹா புயல் குறித்து அறிவிக்கப்பட்டு வருகின்றது.

HOT NEWS