மூன்றாவது தனியார் ரயில்! பிரதமர் மோடி துவக்கி வைத்தார்!

18 February 2020 அரசியல்
mahakaalexpress.jpg

இந்தியாவின் மூன்றாவது தனியார் ரயிலான, மகா கால் எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவையினை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

ஞாயிறு அன்று, உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மத்தியப் பிரதேசத்திற்கும் உத்திரப்பிரதேசத்திற்கும் இடையில், ஆன்மீகப் பயணத்திற்காக இந்த ரயிலினை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ரயிலானது, வருகின்ற பிப்ரவரி 20ம் தேதி முதல் இயங்க ஆரம்பிக்க உள்ளது.

முழுவதும் குளிரூட்டப்பட்ட இந்த இரயிலானது, மூன்று ஜோதிர் லிங்கங்களையும் இணைக்கும் விதத்தில், இயக்கப்பட உள்ளது. மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ஓம்காரேஸ்வரர் கோயில், மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயினியில் உள்ள மகாகாலேஸ்வரர் கோயில் மற்றும் உத்திரப்பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், ஆகியவைகளை இணைத்தும், மத்தியப்பிரதேசத்தில் உள்ள இந்தூர் மற்றும் போபால் ஆகியவைகளையும் இணைத்து, இந்த இரயிலானது இயக்கப்பட உள்ளது.

இந்த இரயிலானது, வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், வாரணாசி மற்றும் இந்தூர் வழியாக மூன்று முறையும், பிராக்கியாராஜ் (அலகாபாத்) வழியாக இரண்டு முறையும் இயக்கப்பட உள்ளது. Sultanpur - Lucknow or Prayagraj - Kanpur - Jhansi - Bina - Sant Hiradnagar - Ujjain - Indore and back என்ற வழித்தடத்தின் மூலம், இயக்கப்பட உள்ளது.

மொத்தமாக 1131 கிலோ மீட்டர் உள்ள பாதையானது, லக்னோ வழியாக வாரணாசி மற்றும் இந்தூருக்கு இடையிலும், 1102 கிலோ மீட்டர் பாதையானது, அலகாபாத் வழியாக வாரணாசி மற்றும் இந்தூருக்கு இடையிலும் இயக்கப்பட உள்ளது. இந்தப் பயணமானது, மொத்தமாக 19 மணி நேரத்தினை உள்ளடக்கியது.

இந்த ரயிலில் பயணிப்பவர்களுக்கு, 10 லட்சம் மதிப்புள்ள இலவச காப்பீடானது பயணத்திற்காக ஒதுக்கப்பட உள்ளது. மேலும், இந்த ரயிலில் பயணிக்க 120 நாட்கள் முன்பாகவே முன்பதிவு செய்தும் கொள்ளலாம் என, இந்திய இரயில்வே துறையானது, அறிவித்துள்ளது.

HOT NEWS