கிருஷ்ணனாக அமீர்கான்! 1000 கோடி பட்ஜெட்! தயாராகும் மகாபாரதம்!

16 June 2020 சினிமா
aamirkhan.jpeg

பாலிவுட் நடிகர்களில் முன்னணி நடிகரான அமீர்கான் நடிப்பில், தற்பொழுது மகாபாரதம் திரைப்படமாக்கப்பட உள்ளது. இதற்கானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது, அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில், கடந்த சில மாதங்களாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்த அமீர் கான் மகாபாரதக் கதையில் நடிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக கதை எழுத விஜயேந்திர பிரசாத்தினை தேர்ந்தெடுத்துள்ளார்.

பிரபல தெலுங்கு இயக்குநரான ராஜமௌலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத், ராஜமௌலியின் மகதீரா, பாகுபலி போன்ற படங்களுக்கும், ஹிந்தியில் ஏற்கனவே சல்மான் கான் நடித்த பஜ்ரங்கி பைஜான், மணிகர்னிகா உள்ளிட்ட பலப் பிரம்மாண்டப் படங்களுக்குக் கதை எழுதியவர். அவர் தற்பொழுது, மகாபாரதக் கதையினை எழுதி வருகின்றார்.

இந்தப் படத்தில், கிருஷ்ணராக அமீர்கானும், அர்ஜூனனாக பிரபாஸூம், பீஷ்மராக அமிதாப் பச்சனும், பாஞ்சாலியாக தீபிகா படுகோனும் நடிக்க உள்ளனர். துரியோதனன் கதாப்பாத்திரத்தில் நடிக்க, அஜய் தேவ்கான் பெயர் அடிபடுகின்றது. தற்பொழுது இந்தப் படத்தில் பணியாற்ற உள்ள பிறக் கலைஞர்களைத் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படமானது, 1000 கோடியில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட உள்ளது.

இதனை இரண்டு பாகமாக உருவாக்கத் திட்டமிட்டு உள்ளனர். ஊரடங்கு முடிந்த உடன், இந்தப் படத்தினை உருவாக்கும் முயற்சிகள் வேகமெடுக்கும் எனவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

HOT NEWS