எனக்குத் தெரியாமல், எனது கணவருடன் ஜெயஸ்ரீ ரகசியமாக நட்பு வைத்திருந்திருக்கின்றார் என, மகாலட்சுமி பேசியுள்ளார்.
நடிகர் ஈஸ்வர் மற்றும் நடிகை ஜெயஸ்ரீ ஆகியோர் சின்னத்திரையில் நல்லப் பிரபலமான நட்சத்திரங்கள். பல நாடகங்களில் இவர்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையில், கடந்த சில வாரங்களாகப் பிரச்சனை நிலவி வருகின்றது. சில நாட்களுக்கு முன், தன் கணவர் ஈஸ்வர் தன்னைத் தாக்கிவிட்டார் என, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், தன்னுடைய கணவர் மீதும் வழக்குத் பதிவு செய்தார்.
ஈஸ்வரின் மனைவி கொடுத்தப் புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து ஈஸ்வரைக் கைது செய்தனர். இருப்பினும், ஜாமீனில் ஈஸ்வர் வெளிவந்தார்.
இந்நிலையில், தன்னுடையக் கணவர் ஈஸ்வருக்கும் நடிகை மகாலட்சுமிக்கும் இடையேத் தொடர்பு உள்ளது என ஜெயஸ்ரீ கூறினார். ஆனால், அப்படி எதுவும் கிடையாது என ஈஸ்வர் மறுத்து வந்தார்.
இவ்வளவு பிரச்சனைகள் வந்து கொண்டிருந்த நிலையில், நடிகை மகாலட்சுமி தற்பொழுது மவுனம் கலைத்துள்ளார். அவர் பேசுகையில், ஈஸ்வர் எனக்கு ஒரு நல்ல நண்பர் மட்டுமே. அவருக்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. எனக்கும், என் கணவருக்கும் இடையில் விவகாரத்து ஆக உள்ளது. இது எங்களுக்கு இடையில் உள்ள விஷயம். ஆனால், அதனைப் பயன்படுத்தி இப்படியொரு குற்றச்சாட்டினை ஜெயஸ்ரீ வைக்கின்றார்.
என்னுடைய கணவருக்கும், நடிகை ஜெயஸ்ரீக்கும் இடையில் ரகசிய நட்பு இருந்து வந்துள்ளது. இருவரும் எனக்குத் தெரியாமல் பல நாட்களாக நட்புடன் இருந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். இது தற்பொழுது, சின்னத்திறை வட்டாரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.