மஹாராஷ்டிராவில் தொடரும் இழுபறி! சிஎம் சீட் கேட்கும் சிவசேனா! கூட்டணியில் விரிசல்!

29 October 2019 அரசியல்
maharashtrabjp.jpg

மஹாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ஆளும் கட்சியான பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. பாஜக கட்சியானது, 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும் வெற்றி பெற்றது. 13 இடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றனர்.

இந்நிலையில், தங்களுக்கு ஆட்சியில் ஐம்பது சதவிகித பங்கு வேண்டும் எனவும், மேலும் ஆட்சியின் கடைசி இரண்டரை வருடத்தில் எங்களுக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்பது குறித்தக் கோரிக்கைகளை கோரி வருகின்றது சிவசேனா. இதனிடையே இன்று நடைபெறவிருந்த பாஜக-சிவசேனா கூட்டத்தினையும் ரத்து செய்தும் உள்ளது.

பாஜகவின் தேவிந்திர பட்னாவிஸ் கூறுகையில், நாங்கள் முதல்வர் பதவி குறித்து, கூட்டணிப் பேச்சுவார்த்தையின் பொழுது, பேசவில்லை. ஆட்சியில் 50 சதவிகிதம் கொடுப்பது குறித்து, பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.

இதனிடையே, தொடர்ந்து ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருகின்றது. சிவசேனாவின் கோரிக்கைள் காரணமாகவும், பாஜகவின் பிடி வாதத்தினாலும் ஆட்சி அமைக்க தாமதமாகி வருகின்றது.

HOT NEWS