மராட்டியத்தில் தொடரும் நீயா நானா! ஆட்சி அமைப்பதில் இழுபறி!

03 November 2019 அரசியல்
shivsena.jpg

மராட்டிய மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு, சிவசேனா தற்பொழுது சில நிபந்தனைகளை விதித்துள்ளது. இதனால், பாஜக ஆட்சி அமைவதில் தொடர்ந்து இழுபறி நிலவி வருகின்றது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், இன்னும் யார் ஆட்சி அமைப்பது என பிரச்சனை நிலவி வருகின்றது. முதலமைச்சர் பதவி, கேபினட் பதவிகள் உட்பட சில கோரிக்கைகளை பாஜகவின் கூட்டணி கட்சியான சிவ சேனா முன் வைத்தது. அப்பொழுது தான், ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க முடியும் என கூறியது.

இந்நிலையில், வரும் 7ம் தேதிக்குள் பாஜக ஆட்சியமைக்காவிட்டால், ஜனாதிபதி ஆட்சி அமையும் என பாஜக நிதி அமைச்சர் சுதிர் கூறினார். இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த சிவசேனா தன்னுடைய பத்திரிக்கையில், இந்த மிரட்டல் பேச்சிற்கு என்ன அர்த்தம், ஜனாதிபதி உங்கள் சட்டைப் பையில் இருக்கின்றாரா என கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், மராட்டியத்தில் ஆட்சி அமைப்பதில், சிவசேனா தற்பொழுது களமிறங்கி உள்ளது. அக்கட்சித் தலைவர்கள், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்து ஆதரவு கோரினர். அதனை ஏற்றுக் கொண்ட சரத் பவார், இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேச உள்ளார்.

HOT NEWS