மஹாராஷ்டிராவில் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, புதிய கோரிக்கை முன்வைக்கப்பட்டு உள்ளது.
மஹாராஷ்டிராவின் ஜீரோ நேர கேள்வியின் பொழுது, மஹாராஷ்டிராவில் சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படுமா என கேள்வி கேட்க்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த துணை முதல்வர் அஜித்பவார், மஹாராஷ்டிரா விகாஸ் அகாதி கூட்டணி உறுப்பினர்கள் அனைவருமே, சாதி வாரிக் கணக்கெடுப்பிற்கு ஆதரவு அளித்துள்ளனர்.
இதனை முன்னிட்டு, மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவினையும் சந்தித்து தன்னுடையக் கருத்தினை வலியுறுத்துவார். மத்திய அரசு, நம்முடைய கோரிக்கைக்கு செவிமடுக்காத பட்சத்தில், மாநில அரசே தனியாக சாதிவாரிக் கணக்கெடுப்பினை, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் பொழுது, நடத்தும் எனவும் கூறினார்.
ஏற்கனவே, ஒடிசாவின் பிஜூ தனா தளம், மற்றும் பீகார் மாநிலத்தின் ஆளும் கட்சியும், சாதி வாரிக் கணக்கெடுப்பிற்கு தீர்மானங்களை, தங்களுடைய மாநிலங்களில் நிறைவேற்றி உள்ளன. அம்மாநிலங்களில், சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பும் தனியாக நடத்தப்பட உள்ளது. இதற்கிடையே, உத்திரப் பிரதேசத்திலும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என, முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவின் துணை முதல்வர் அஜித் பவார் பேசுகையில், நம் மாநிலத்தில் உள்ள ஓபிசி பிரிவினரின் எண்ணிக்கையை எடுக்கவே, இந்த முயற்சியானது நடத்தப்பட உள்ளது எனத் தெரிவித்தார். அவ்வாறு எடுப்பதன் மூலம், ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டினை மேலும் சிறப்பாக செய்ய இயலும் எனவும் அவர் கூறினார். மத்திய அரசின் கணக்கின் படி, இந்தியாவில் உள்ள ஓபிசி பிரிவினர் எண்ணிக்கையானது 6,285 ஆக உள்ளது. இது, 7,200 வரை இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.