நடிகை கங்கனா ரனாவத் போதைப் பொருள் பயன்படுத்தினாரா என சோதனை செய்ய வேண்டும் என, மஹாராஷ்டிரா அரசு உத்தரவிட்டு உள்ளது.
நடிகை கங்கனா ரனாவத்திற்கும், மஹாராஷ்டிரா அரசிற்கும் கடுமையான மோதல் நடைபெற்று வருகின்றது. மும்பை பாகிஸ்தானைப் போன்ற மிக மோசமான நகரம் என்று கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து, கங்கனா ரனாவத்தின் மும்பை அலுவலகம், அத்துமீறி விதிமுறைகளைப் பின்பற்றாமல் கட்டப்பட்டு உள்ளதாக, இடிக்கப்பட்டது.
இருப்பினும், நீதிமன்றம் அந்தக் கட்டிடத்தினை இடிக்க தடை விதித்ததால், அக்கட்டிடத்தினை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில், தொடர்ந்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தின் மூலம், மஹாராஷ்டிரா அரசினை அவர் இழிவுப்படுத்திக் கொண்டே இருந்தார். இந்நிலையில், கங்கணா ஆத்யாயன் என்ற நபருடன் உறவில் இருந்தார். அவர் அளித்தப் பேட்டியில், கங்கணா தடை செய்யப்பட்ட போதைப் பொருளைப் பயன்படுத்தியதாக கூறியிருந்தார்.
இதனை முன்னிட்டு, அவர் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி உள்ளாரா இல்லையா என, சோதனை செய்ய வேண்டும் என, மஹாராஷ்டிரா அரசு அம்மாநில போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளது.