இங்கு அந்த சட்டத்தினைக் கொண்டு வந்தால் என்ன ஆகும் தெரியுமா? மலேசியா அதிபர்!

23 December 2019 அரசியல்
mahadirmohamed.jpg

மலேசியாவில் இந்த சட்டத்தினை என்ன ஆகும் என, உங்களுக்கு நன்றாகவேத் தெரியும். எங்கும் குழப்பமும், ஸ்திரத்தன்மையும் நிலவ ஆரம்பித்துவிடும் என, மலேசியாவின் அதிபர் மஹாதீர் முஹம்மது பேட்டியளித்தார்.

மலேசியாவில் இந்தியர்களுக்கும், சீனர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டு உள்ளது. அவர்களில் எவ்விதப் பேதமும் நாம் பார்ப்பதில்லை. ஏன், அவர்கள் தற்பொழுது சட்டசபையினையும் அலங்கரித்து உள்ளனர். இப்படி இருக்கையில், கடந்த 70 ஆண்டுகளாக இந்தியா குடிமக்கள் எந்தவிதப் பிரச்சனைகளுமின்றி ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், இந்த சட்டத்திற்கு தற்பொழுது கொண்டு வருவதற்கு என்ன அவசியம் வந்துள்ளது எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஏற்கனவே, ஜம்மூ காஷ்மீர் விவகாரத்தில், இந்தியா காஷ்மீரினை ஆக்கிரமித்துள்ளது எனக் கூறினார். தற்பொழுது இரண்டாவது முறையாக, இந்தியாவின் இந்த சட்டத்தினைப் பற்றிக் கூறியுள்ளார். இவருடைய இந்தக் கருத்திற்கு இந்திய வெளியுறவுத் துறை தன்னுடையப் பதிலை அளித்துள்ளது.

மத ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளான மக்கள் இந்த சட்டத்தின் மூலம் பயன்பெறுவர் எனவும், இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் எனவும் கூறியுள்ளது.

HOT NEWS