மகிந்தா ராஜபக்ஷே பிரதமர் ஆனார்!

21 November 2019 அரசியல்
mahindarajapaksa.jpg

கோத்பய ராஜபக்ஷே அதிபராக பதவியேற்றதை அடுத்து, ரனில் விக்ரமசிங்கே தன்னுடையப் பிரதமர் பதவியினை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, கோத்பய ராஜபக்ஷேவின் சகோதரரான மகிந்தா ராஜபக்ஷே இலங்கைப் பிரதமராக பதவியேற்றார்.

நவம்பர் 16ம் தேதி வெளியான முடிவில், கோத்பய ராஜபக்ஷே தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்கேவினை வெற்றி கொண்டார். இதனையடுத்து, இலங்கையின் அதிகாரப்பூர்வ அதிபராக அவர் பொறுப்பேற்றார். அவருக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்நிலையில், இன்று தன்னுடையப் பிரதமர் பதவியினை ரணில் விக்ரமசிங்கே திடீரென்று ராஜினாமா செய்தார். இதனால், அந்த இடத்திற்கு, தன்னுடைய அண்ணனான மகிந்தா ராஜபக்ஷேவினை பிரதமராகப் பொறுப்பேற்க அழைத்தார். இதனைத் தொடர்ந்து, மகிந்தா பிரதமராக பதவியேற்றார்.

வரும் ஆகஸ்ட் 2020ம் ஆண்டு, நடைபெறும் தேர்தல் வரையிலும், மகிந்தா ராஜபக்ஷ பிரதமராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 74 வயதான மகிந்தா ராஜபக்ஷே, 2005 முதல் 2015ம் ஆண்டு வரையிலும், இலங்கையின் அதிபராக பதவி வகித்தவர். இவரை, மிக நீண்ட நாட்களாக ஆட்சி செய்த தலைவராக தெற்கு ஆசியாவில் புகழப்படுகிறார். தன்னுடைய 24வது வயதில், 1970ம் ஆண்டு முதன் முதலாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த இளம் உறுப்பினர் என்றப் பெருமையை உடையவர். விடுதலைப் புலிகளுக்கு எதிரானப் போரில், தலைவர் பிரபாகரனை வீழ்த்தியதும் இவரது ஆட்சியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS