மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொது செயலராக பணி புரிந்து வந்த, அருணாச்சலம் தற்பொழுது பாஜகவில் இணைந்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியானது ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து, அக்கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவராகவும், பொதுச் செயலராகவும் இருந்தவர் அருணாச்சலம். இவர் இன்று காலையில், சென்னை வந்திருந்த பாஜக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில், பாஜகவில் இணைந்தார். இதனை பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இந்த சூழலில், கட்சிக்கு எதிராகவும், கலங்கம் ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டார் என, அவரைக் கட்சியில் இருந்து நீக்குவதாக, அக்கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரன் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
தேர்தல் வரும் சமயத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது சகஜமான விஷயம் தான். ஆனால், கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரே, இவ்வாறு தன்னுடையக் கட்சியினை விட்டு விட்டு வேறொரு கட்சிக்கு சென்றதால், மக்கள் நீதி மய்யம் கட்சியின் கூடாரம் கலைய ஆரம்பித்து உள்ளது என, அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.