வருகின்ற 2021ம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலானது நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் குறித்து, நேற்று கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியானது, ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. சென்னை தியாகராயநகரில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உட்பட, முக்கிய நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர். 2 நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகளும் தேர்தல் யுக்திகள் குறித்தும் விவாதிக்கப்படுகின்றது.
கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக, பிரத்யேக தேர்தல் வாகனமும் தயார் செய்யப்பட்டு உள்ளது. கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் கூறுகையில், தேர்தல் பணிகளை கவனமாக செய்யுங்கள். கூட்டணி விவகாரத்தினை நான் பார்த்துக் கொள்கின்றேன். வெற்றிக்காக அனைவருமே உழைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இவருடைய இந்தக் கூட்டத்தால், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிளும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.