காஷ்மீர் மாணவர்களுக்கு உதவுங்கள்! ஐநாவிற்கு மலாலா கோரிக்கை!

16 September 2019 அரசியல்
malala.jpg

காஷ்மீர் பகுதியில், 40 நாட்களுக்கும் மேலாக, மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்ல இயலவில்லை எனவும், இதனை ஐநா கவனிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த 22 வயதுள்ள மலாலா, அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர். இவர், தற்பொழுது பல சமூக சேவைகளிலும், இஸ்லாமியப் பெண்களுக்காகவும் போராடி வருகிறார். கல்வியால் மட்டுமே அனைத்தையும் மாற்ற இயலும் எனவும் கூறி வருகிறார்.

அவர் தற்பொழுது காஷ்மீர் விவகாரம் பற்றி மனம் திறந்துள்ளார். அவர் ஐநாவிற்கு விடுத்துள்ள வேண்டுகோளில், காஷ்மீர் பிரச்சனையின் காரணமாக, காஷ்மீரைச் சேர்ந்த, மாணவர்கள் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக, பள்ளிக்குச் செல்லவில்லை எனவும், பெண் குழந்தைகள் வீட்டினை விட்டு வெளியில் வர அஞ்சுகின்றனர் எனவும் கூறியுள்ளார். மேலும் கூறுகையில், காஷ்மீர் மக்களின் கோரிக்கைகளை கேளுங்கள், அவர்களுடைய பேச்சிற்கு மதிப்பளியுங்கள் எனவும் கூறியுள்ளார்.

HOT NEWS