பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டாலும், தவறுகளை சுட்டிக் காட்டுவோம்! மலேசியா அதிபர் அதிரடி!

15 January 2020 அரசியல்
mahadirmohamed.jpg

இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட சிஏஏ மற்றும் என்ஆர்சி சட்டத்திற்கு, மலேசியா நாட்டின் அதிபர் மஹதீர் கண்டனம் தெரிவித்தார். அவருக்கு இந்தியாவின் சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. மேலும், அந்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பாமாயிலின் மீது, இந்திய அரசாங்கம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்தியாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மலேசியாவின் அதிபர் மஹதீர் தொடர்ந்து தன்னுடைய விமர்சனத்தை கூறி வைத்தார். இதனால், மத்திய அரசு அவர்களுக்கு தன்னுடைய கண்டனத்தினைப் பதிவு செய்து வந்தது.

மலேசியாவில் இருந்து, பாமாயிலினை இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்கின்றது. இந்நிலையில், தற்பொழுது அதற்கு அதிக அளவில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், இந்த கட்டுப்பாட்டின் காரணமாக, விலை உயரும் அபாயம் உள்ளதாக, எண்ணெய் சந்தையில் தெரிகின்றது.

இதற்கு, செய்தியாளர்களிடம் பேசும் பொழுது பதிலளித்த மலேசிய அதிபர் மஹதீர், இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது அந்நாட்டு மக்களுக்குப் பிடிக்காத செயல். அங்கு பாரபட்சம் காட்டப்படுவது தவறு என, உலகமே கருதுகின்றது. தடைகள் விதிப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. பணத்திற்கு ஆசைப்பட்டு உண்மையைக் கூறமால் விட்டுவிட்டால், அது சமூகத்தினைப் பாதிக்கும்.

ஈரான் மீது பொருளாதாரத் தடை விதித்தால், அந்நாடு மட்டுமல்ல, எங்கள் நாடும் பாதிக்கும். அங்குள்ள எங்களுடைய வர்த்தகம் பாதிக்கும் என, ஈரான் மற்றும் அமெரிக்கா விவகாரம் குறித்து தகவல் கூறியுள்ளார். ஏற்கனவே, காஷ்மீர் விகாரத்தில், தன்னுடைய வெளிப்படையான கருத்தினைக் கூறியிருந்தார் மஹதீர் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS