மார்ச் 4,2014ம் ஆண்டு மலேசியாவைச் சேர்ந்த எம்ஹெச் 370 விமானம் காணாமல் போனது. அன்று முதல் இன்று வரை இதனைத் தேடும் பணியில், பலத் தன்னார்வ குழுக்கள் இருக்கின்றன. இருப்பினும், இன்னும் இந்த விமானத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நகருக்கு மலேசியா எம்ஹெச் 370 விமானம், மார்ச் மாதம் நான்காம் தேதி, 2014ம் ஆண்டு கிளம்பியது. அந்த விமானம் போயிங் 777 வகையைச் சார்ந்தது. இந்த விமானத்தில் 239 பயணிகள் பயணம் செய்தனர்.
இந்த விமானத்தை ஷஹரின் அகமத் ஷா விமானியாக இயக்கியுள்ளார். அவருடன் ஒரு துணை விமானியும் இருந்துள்ளார். விமானம் கிளம்பி நன்றாகப் பறந்து கொண்டு இருந்துள்ளது. இருப்பினும், திடீரென்று கட்டுப்பாட்டு அறையில் உள்ள ரேடாரில் இருந்து மாயமானது. இதனை முன்னிட்டு மலேசியா அரசாங்கம் தேடும் பணியைத் தொடங்கியது.
மலேசியாவிற்கு உதவியாகப் பல நாடுகளும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் ஏமாற்றமே மிஞ்சியது. விமானத்தில் இருந்த அனைவருமே, இறந்துவிட்டதாக மலேசியா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து இந்த விமானத்தைத் தேடும் பணியை தொடர்ந்து நடத்தியது. இருப்பினும், பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாததால், தேடுதல் பணியை கைவிட்டது. ஆனால், ஒரு சில தனியார் தன்னார்வ அமைப்புகள், தேடுதல் பணியை மேற்கொண்டன. அவ்வாறு, மேற்கொண்ட அமைப்புகளில், ஒரு அமைப்பில் உள்ள எலக்ரிக்கல் பொறியாளர் மைக் எக்ஸ்னர் திடீரென்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.
அவர் கூறுகையில், அந்த விமானத்தை இயக்கிய விமானி ஷா, தன்னுடன் பணி செய்த துணை விமானியை கொன்று இருக்கலாம் அல்லது அவரை விமானத்தை இயக்கும் அறையில் இருந்து, சாமர்த்தியமாக வெளியேற்றி இருக்கலாம். பின்னர், விமானத்தை 40,000 அடி உயரத்திற்கு கொண்டு சென்று இருக்க வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது, காற்றழுத்தக் குறைவு காரணமாக, ஆக்சிஜன் யாருக்கும் கிடைத்திருக்காது. அவசர கால ஆக்சிஜன் மாஸ்க்குகளும், வெளிவராத படி அவர் செய்திருக்க வேண்டும்.
அப்படி நடந்திருந்தால், அனைத்துப் பயணிகளும் சரியாக 15 நிமிடத்தில் இறந்து இருப்பர். பின்னர், இவர்கள் இறந்ததைப் பார்த்து ரசித்தப் பின், விமானத்தை இந்தியப் பெருங்கடலில் மோத வைத்திருப்பார் என, அவர் விவரிக்கிறார். இது தற்பொழுது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விமானி ஷாவின் வாழ்க்கை கஷ்டமாகவே இருந்துள்ளது. திருமணமாகி சில மாதங்களிலேயே விவாகரத்து, தனிமை என மனம் நொந்து இருந்துள்ளார். இந்த மன உளைச்சலே இந்த பிரச்சனைக்குக் காரணம் என, அந்த பொறியாளர் நம்புகிறார்.