திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட மாலத்தீவு முன்னாள் துணை அதிபர்!

04 August 2019 அரசியல்
maldivesexvp.jpg

முறையான ஆவணங்கள் இல்லாமல், தமிழ்நாட்டின் கடலோர எல்லைப் பகுதிக்கு வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் திரு. அஹமத் அதீப் அப்துல் ஹாஃபர் அவர்களை, இந்தியக் கடலோரக் காவல்படை திருப்பி அனுப்பியது.

விர்கோ 9 என்ற கப்பலில், இந்திய கடற்பகுதியில் ஒன்பது சிபந்திகளுடன் வந்தக் கப்பலை, சந்தேகப்பட்டு நம் நாட்டின் கடற்படை வீரர்கள் நிறுத்தி விசாரித்தனர். அதில் அவர் இருந்ததை அடுத்து, அவரின் ஆவணங்களை கேட்டுள்ளனர். அவரிடம் முறையான ஆவணங்கள் இல்லாததால், அவரை மாலத்தீவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், அவர் மாலத்தீவில் பலக் குற்றங்களுக்காக, தண்டனைப் பெற்றவர் எனவும், அவர் அங்கிருந்து தப்பித்து இந்தியா வந்ததாகவும் கூறியுள்ளனர். முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனைக் கொலை செய்த வழக்கில், இவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளதாம் மாலத்தீவு. ஆனால், அதனை எதிர்த்து மறு ஆய்வு மனுவினையும் அவர் தாக்கல் செய்துள்ளாராம். இது தவிர்த்து, சட்ட விரோதப் பணப்பரிமாற்றம், உட்பட பல விஷயங்களில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS