ரேஷன் கடையில் மளிகைப் பொருட்கள்! தமிழக அரசு அறிவிப்பு!

11 April 2020 அரசியல்
maligairation.jpg

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு மிகவும் கஷ்டப்படுகின்றனர். அவர்கள் தங்களுடைய அன்றாட உணவுத் தேவைகளுக்கான மளிகைப் பொருட்களை வாங்குவதற்கும் கஷ்டப்படுகின்றனர். இந்நிலையில், இந்த ஊரடங்கு உத்தரவானது, நீட்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை முன்னிட்டு, தமிழக அரசே தற்பொழுது நியாய விலைக் கடைகளில், மளிகைப் பொருட்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி, 19 மளிகைப் பொருட்களை கொண்ட, ஒரு பையின் விலையானது சுமார் 500 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

அந்த மளிகைப் பையில், அரைகிலோ துவரம் பருப்பு, அரை கிலோ உளுந்தம் பருப்பு, கால் கிலோ கடலை பருப்பு, 100 கிராம் மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம் வழங்கப்படுகின்றன. மேலும், 250கி தோசை புளி, 250கி பொட்டுக்கடலை, 150கிராம் நீட்டு மிளகாய், 200கி தனியா, 100 கி மஞ்சள்தூள், 100கி டீதூள், ஒரு கிலோ உப்பு, 250 கி பூண்டு, 200கி கோல்ட் வின்னர் சன்ப்ளவர் ஆயில், 10கி பட்டை, 50கி சோம்பு, 100கி மிளகாய் தூள் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அவைகளின் சந்தை மதிப்பு என்ன என்பதும், நியாயவிலைக் கடையில் என்ன விலை என்பதையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

HOT NEWS