கொரோனா நெருக்கடியை நீங்களே ஏன் கையாளக் கூடாது? மம்மதா கேள்வி!

28 May 2020 அரசியல்
mamatabanerjee1.jpg

கொரோனா நெருக்கடியினை நீங்களே ஏன், கையாளக் கூடாது என, மேற்கு வங்க முதல்வர் மம்மதா பேனர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று, செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரொனோ வைரஸ் குறித்து பேசினார். அவர் பேசுகையில், இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகின்றது. இந்நிலையில், ஊரடங்கினை அறிவித்துள்ள மத்திய அரசானது, இரயில்களையும், விமானங்களையும் இயக்கி வருகின்றது.

இதனால், கொரோனா வைரஸானது ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு பரவுகின்றது. ஏற்கனவே எங்கள் மாநிலத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சேதாரம் ஏற்பட்டு உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த கொரோனாவும் மற்ற மாநிலத்தில் இருந்து வரும் புலம்பெயரும் தொழிலாளர்களால் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

ஏன், நீங்களே மேற்கு வங்கத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க்க் கூடாது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னறிவிப்பு இல்லாமல், ரயில்களை இயக்குவதால், எங்களால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இயலவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

HOT NEWS